அறிவுரைகளை ஏற்போம்!
ஒரு வீட்டில், பீரோவில் இருந்த பணம் அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருந்தது. வீட்டுத்தலைவருக்கு ஒரே குழப்பமும், வருத்தமும், வீட்டிற்குள் இருக்கும் யாரோ ஒருவர்தான் பணத்தை எடுக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும், பத்து பேர் இருக்கும் வீட்டில் யாரைக் கேட்டாலும் சண்டை வந்து விடுமே என்ற பயத்தில், கர்த்தர் என்றேனும் வழி காட்டுவார் என காத்திருந்தார். சில மாதங்கள் வரை திருட்டு தொடர்ந் தது. ஒருநாள் இரவில், “ஐயோ! என் புடவையை பிசாசு இழுக்கிறானே... காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்,” என வீட்டுத்தலைவரின் மனைவி கத்தினாள். வீட்டுத்தலைவரும் மற்றவர்களும் ஓடினர். அங்கு அவரது மனைவி இருட்டில் நின்றபடி, கத்திக் கொண்டிருந்தாள். விளக்கை ஆன் செய்து பார்த்தால், அந்தப் பெண்ணின் புடவை பீரோ இடுக்கில் மாட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இது புரியாமல், அந்தப்பெண் ஏதோ பி சாசிடம் மாட்டிக்கொண்டதாக நினைத்து சத்தம் போட்டு விட்டாள். அவள் கையில் பணம் இருந்தது. இப்போது தான் வீட்டுத்தலைவருக்கு உண்மை புரிந்தது. தன் மனைவியே தன் வீட்டில் திருடியது பற்றி வருத்தப்பட்டார். பைபிளை எடுத்து வந்து பத்து கட்டளைகளில் ஒன்றான களவு செய்ய õதிருப்பாயாக என்பதை வாசித்துக் காட்டினார். அவளும் தன் தவறுக்காக வருந்தி அன்று முதல் திருந்தி விட்டாள். நாமும் பைபிள் சொல்லும் அறிவுரைகளை ஏற்று நடப்போம்.