தட்டிக் கேட்க ஒருவன் இருக்கிறான்!
நாம் வைத்தது தான் சட்டம், நாம் சொல்வது மட்டும் தான் நடக்க வேண்டும், நான் நினைத்ததை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வேன் என ஆணவத்துடன் திரிபவர்கள் பலர் பூமியில் இருக்கிறார்கள். இவர்களது ஒரே தைரியம் என்ன தெரியுமா? நம்மைத் தட்டிக் கேட்க யார் பூமியில் இருக்கிறார்கள் என்பது தான். நபிகள் நாயகம் இவர்களுக்காகவே, ஒரு அருமையான வசனத்தை அல்லாஹ்விடம்இருந்து பெற்று அருளியிரு க்கிறார். “உலகம் வெளிஅழகைக் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மறுமை (மரணத்துக்குப் பிறகுள்ள வாழ்க்கை) நம்மை நோக்கி வந்து கொண்டிரு க்கிறது. இந்த இரண்டுக்கும் வெவ்வேறு மனிதர்கள் உள்ளனர். நீங்கள் மறுமையின் மனிதர்களாக மாறிவிடுங்கள். உலக மனிதர்களாக ஆகிவிடாதீர்கள். இங்கே செயல் மட்டுமே கேள்வி இல்லை. அங்கே கேள்வி மட்டுமே; செயல் இல்லை” என்பதே அந்த வசனம். ஆம்... இங்கே நாம் என்ன வேண்டுமானாலும் பாவச்செயல்களை செய்து பலனடைந்து கொண்டிருக்கலாம். இங்கே கேள்வி கேட்க ஆளில்லை என்ற தைரியம் இரு க்கலாம். அப்படியே கேள்வி கேட்டாலும் அவர்களை ஆட்சி, அதிகாரம், பணத்தை வைத்து ஒடுக்கி விடலாம். ஆனால், அங்கே யாரையும் அடக்க முடியாது. இங்கே செய்யும் செயல்களுக்கு அங்கே பதிலளிக்க வேண்டியிருக்கும். அப்போது பதில் சொல்ல முடியாவிட்டால் நரக நெருப்பில் வீழ வேண்டியிருக்கும்.