உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் ராஜகோபுரத்தைவிட கருவறை விமானம் பெரிதாய் இருப்பது ஏன்?

தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் ராஜகோபுரத்தைவிட கருவறை விமானம் பெரிதாய் இருப்பது ஏன்?

சிற்ப சாஸ்திரத்தில் இதற்கு மேரு ப்ரஸ்தரம் என்று பெயர்.  பாரத தேச அமைப்பை மூன்றாகப் பிரித்துள்ளார்கள். நாகரம், வேஸரம், திராவிடம்  என்பன அவை. வடமாநில கோவில்களில் நாகரம் என்னும் சிற்பகலையை காணலாம். அங்கு கருவறைக்கு மேலுள்ள விமானம் தான் பெரிதாய் இ ருக்கும். ராஜகோபுரம் இருக்காது. வேஸரம் என்பது ஒடிசா, மகாராஷ்டிரா மத்திய மாநிலங்களில் இருக்கும்.  இங்கு தென்னாட்டு அமைப்பில்  விமானங்கள் இருந்தாலும், ராஜகோபுரத்திற்கு முக்கியத்துவம் பெறுவதில்லை. திராவிடம் என்பது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆந்திர மா நிலங்களாகும். அழகான விமானமும் ராஜகோபுரங்களும் ஒருங்கே அமைக்கப்பட்ட கோவில்கள் இங்கு மட்டுமே உள்ளன. ராஜராஜசோழன்  வடநாடுகளையும் தமது ஆட்சியில் அடக்கியவர். அவர் அங்குள்ள உயர்ந்த விமான கோபுரத்தை, தமிழக கலாசாரம் மாறாமல் சோழதேசத்தில்  அமைக்க ஆசைப்பட்டார். தட்சிணமேரு என்ற பெயரில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கருவறை மீது அமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !