கடையம் கோயில்களில் நவராத்திரி விழா
ஆழ்வார்குறிச்சி : கடையம் வட்டார கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. ஆழ்வார்குறிச்சி அங்காள பரமேஸ்வரி அம்பாள் கோயில், நடுத்தெரு முப்புடாதி அம்மன் கோயில், அரண்மணை முப்புடாதி அம்மன் கோயில், வாகையடி முப்புடாதி அம்மன் கோயில், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் எதிரில் உள்ள முப்புடாதி அம்மன் கோயில், கடையம் கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயில், வில்வவனநாதர்-நித்யகல்யாணி அம்பாள் கோயில், முப்புடாதி அம்மன் கோயில் உட்பட கடையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. பல கோயில்களில் கொலு அலங்கரிக்கப்பட்டு 9 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நாளில் கோயில்கள் மட்டுமின்றி ஆட்டோ ஸ்டாண்ட் உட்பட அனைத்து இடங்களிலும் வாழை, மாவிலை தோரணங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனால் கடையம் வட்டாரம் முழுவதும் கோலாகலமாக காணப்பட்டது.