பாலாஜி அம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :3278 days ago
அன்னுார் : அன்னுார் அருகே உள்ள நாகமாபுதுாரில், 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தல்லி பாலாஜி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, பழைய கோவில் கட்டடத்தை அகற்றி, புதிதாக சிற்ப சாஸ்திரப்படி, மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், விமான கோபுரம், சுற்றுப்பிரகாரம் ஆகியவை பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து கும்பாபிஷேக விழா, நேற்று காலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. சுதர்ஷன ஹோமம், நவகிரக ஹோமத்துடன், முதற்கால யாக பூஜை துவங்கியது. இன்று பகல் இரண்டாம் கால யாக பூஜையும், 108 வகை திரவியங்கள் சமர்ப்பிக்கும் ஹோமமும் நடக்கிறது. இரவு கோபுர கலசம் வைக்கப்படுகிறது. நாளை (18ம் தேதி) காலை 9:00 மணிக்கு ஸ்ரீ தல்லி பாலாஜி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.