அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
ADDED :3275 days ago
மதுரை, மதுரை எல்லீஸ் நகரில் மீனாட்சி அம்மன் கோயில் வாகன காப்பகம் உள்ளது. இதன் வளாகத்தில் சபரிமலை சீசனை முன்னிட்டு அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சீசன் முடியும் வரை அன்னதானம் வழங்குவது வழக்கம்.இந்தாண்டு கோயில் நிர்வாகத்துடன் இணைந்து தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. நவ.,21 மதியம் 12:30 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன், போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன், ஐயப்பா சேவா சங்க நிர்வாகி ஆனந்த் செய்து வருகின்றனர்.