உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சரணகோஷம்!

தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சரணகோஷம்!

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஐய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சரணகோஷம் ஓங்கி ஒலிக்கிறது.   தேவிபட்டினம் நவபாஷாணம் ஆன்மிக தலங்களில் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. சவரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும்  பக்தர்கள் நவபாஷாண கடலில் புனித நீராடியபின் பூஜைகள் செய்து வழிபட்டு செல்வது வழக்கம். இதன்காரணமாக ஒவ்வொரு ஆண்டும்  நவபாஷாணம் வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது. கார்த்திகை 1ம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள்  நவபாஷாணம் வர துவங்கியுள்ளனர். நேற்று ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நவபாஷாணத்தை சுற்றி ஐயப்ப பக்தர்களின்  சரணகோஷம் ஓங்கி ஒலித்தது. ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான வசதிகளை இந்து அறநிலைய துறையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !