உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஐயப்பன் கோவில் கொடியேற்றம்!

திருப்பூர் ஐயப்பன் கோவில் கொடியேற்றம்!

திருப்பூர்: திருப்பூர் ஐயப்பன் கோவிலில், கொடியேற்று விழா மற்றும் புதிய ரதம் வெள்ளோட்டம் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. காலேஜ் ரோடு, ஐயப் பன் கோவிலில், 57வது  மண்டல பூஜை விழா, கடந்த, 16ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, 4:30 மணிக்கு, மஹா கணபதி ÷ ஹாமத்தை தொடர்ந்து, 9:00 மணிக்கு, புதிய ரதம் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடந்தது. வேங்கை மரத்தில்,  3.5 டன்  எடையில், 12.25 அடி உயரம்,  ஏழரை அடி நீளம், நான்கரை அடி அகலத்தில் ரதம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு மண்டல பூஜை விழாவில், வரும்,  23ம் தேதி, புதிய ரதத்தில் சுவாமி  திருவீதி உலா நடைபெற உள்ளது. ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில், புதிய ரதத்தின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது; மலர் அலங்கா ரத்தில் புதிய ரதத்தை, ஐயப்பன் கோவில் முதல், ஓடக்காடு விநாயகர் கோவில் வரை கொண்டு சென்று, மீண்டும் கோவிலில் நிலை நிறுத்தினர். நேற்று  மாலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டு,  சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரு மோகனரு தலைமையில், கொடியேற்றப்பட்டது. சாமியே சரணம்  ஐயப்பா என்று பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். இன்று காலை, கணபதி ஹோமம், நவ கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம்; நாளை  காலை, நவகலச அபிஷேகம்; மாலை, 6:45 மணிக்கு பகவதி சேவை நடக்கின்றன. வரும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு உற்சவ பலி பூஜை;  இரவு, 7:00 மணிக்கு தாயம்பகை மேளம்; 22ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பள்ளி வேட்டை; 23ம் தேதி ஐயப்பன் ஆறாட்டு மற்றும் அன்று மாலை,  ஐயப்பன் ரத ஊர்வலம் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !