ஒரு கோடி தனலட்சுமி மந்திர ஜப ஹோமம்
ADDED :3283 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், ஸம்வத்ஸர அபிஷேகம் ஹோமம் நிறைவு விழா மற்றும் ஒரு கோடி தனலட்சுமி பீஜ மந்திர ஜப ஹோமம் துவக்க விழா நேற்று நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமை வகித்தார். சக்தி அம்மா ஒரு கோடி தனலட்சுமி ஹோமத்தை துவக்கி வைத்தார். விழாவில் ரத்தினகிரி பாலமுருகன் சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா உட்பட பலர் பங்கேற்றனர்.