உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சங்காபிஷேகம்

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சங்காபிஷேகம்

கீழக்கரை: கீழக்கரை மேலத்தெரு மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ருத்ர ஹோமம், சிவநாம அர்ச்சனை, வில்வ சங்கல்ப பூஜைகள் நடந்தது. சங்கில் நிரப்பப்பட்ட புனித நீரைக்கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !