ஈரோடு மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு வழிபாடு
ADDED :3277 days ago
ஈரோடு: ஈரோட்டில், கிழக்கு காவிரிக்கரையான கருங்கல்பாளையத்தில் எழுந்தருளியிருக்கும், சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடக்கிறது. நடப்பாண்டில் டிச.,4ல் நடக்கிறது. கடந்த, 22ல் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கம்பம் நடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர். கம்பம் நடப்பட்டதை தொடர்ந்து, நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் வேப்பிலையுடன், மஞ்சள் நீரை ஊற்றி வழிபடத் தொடங்கியுள்ளனர்.