உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலைக்கு கேரள அரசு பஸ்சில் 2.77 லட்சம் பக்தர்கள் பயணம்!

சபரிமலைக்கு கேரள அரசு பஸ்சில் 2.77 லட்சம் பக்தர்கள் பயணம்!

சபரிமலை: சபரிமலைக்கு இயக்கப்படும் பஸ்கள் மூலம் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு  93 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சபரிமலைக்கு  சிறப்பு பஸ்களும், வெளி மாநில பக்தர்கள் வசதிக்காக இன்டர் ஸ்டேட் பஸ்களும்  இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தென்காசி, கோயம்புத்துார், கன்னியாகுமரி, பழநி ஆகிய ஊர்களுக்கு  பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை, தேனி, சென்னை ஆகிய இடங்களுக்கு விரைவில் பஸ்கள்  இயக்கப்படவுள்ளது. பம்பை பஸ் ஸ்டாண்டில் இருந்து 75 தாழ்தள சொகுசு பஸ்கள் உட்பட  145 பஸ்கள் இயக்கப்படுகிறது.  ரயிலில் வரும் பக்தர்கள் வசதிக்காக செங்கன்னுார் ரயில் நிலையத்திற்கு அதிக பட்சமாக 578  முறை பஸ்கள்  இயக்கப்பட்டுள்ளது. மண்டல சீசன் துவங்கி  நேற்று முன்தினம் வரை 2.77 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு 93.31 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

அபராதம்: கேரள அரசு போக்குவரத்துக்கழகத்துக்குரிய பம்பை கேன்டீனில் உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனை நடத்தினர், இதில்  உணவு பொருட்கள் எடை மற்றும் அளவு குறைவாக கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !