உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கோவில்களில், சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே மாகாளியம்மன் கோவிலில், சனிப்பிரதோஷத்தையொட்டி ருத்ரலிங்கேஸ்வரருக்கும், நந்திக்கும் சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, ருத்ரலிங்கேஸ்வரர் ருத்ராட்ச மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவில், பெரியகளந்தை ஆதீஸ்வரன் கோவில், பொள்ளாச்சி ஐயப்பன் கோவில், தேவம்பாடிவலசு அம்மணீஸ்வரர் கோவில், ஜலத்துார் ஐயன் கோவில், நெகமம் கப்பளாங்கரை  பரமசிவன் கோவில், பொள்ளாச்சி ஜோதிநகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், நெகமம் பட்டணம் சிவன் கோவில், தேவனாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இந்தக்கோவிலில் சனிக் கிழமை நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜையையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை, 5:30 மணிக்கு, சிவலிங்கத்துக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான  அபிேஷக பூஜைகள் நடந்தன. பின்னர் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !