விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்!
ADDED :3346 days ago
விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதம் திங்கள் கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சொக்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சன்னதி முன்பு 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.