ராக்காச்சியம்மன் கோயிலில் சர்வசக்தி பூஜை
ADDED :3336 days ago
கடலாடி: கடலாடி அருகே எம்.தனியங்கூட்டம் கிராமத்தில் உள்ள வனப்பேச்சியம்மன், ராக்காச்சியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சர்வசக்தி பூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள கொண்டன அய்யனார், சப்தகன்னிமார்கள் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பெண்கள் பொங்கலிட்டும், நெய்விளக்கேற்றியும் வழிபட்டனர். சர்வசக்தி பூஜை நடந்தது.