உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்திமலை கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

திருமூர்த்திமலை கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

உடுமலை : திருமூர்த்திமலை கோவிலில் நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வருகிறது. இங்கு மும்மூர்த்திகள் சங்கமித்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கோவை, திருப்பூர் மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை தருவர். கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் மக்கள் அதிக அளவில் வருவர். கார்த்திகை மாத அமாவாசையான நேற்று காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், பஞ்சலிங்கம் அருவியிலும் ஓரளவுககு தண்ணீர் வருவதால், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் பணியாளர்கள், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !