உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் உண்டியல் ரூ.19.95 லட்சம் காணிக்கை வசூல்

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் ரூ.19.95 லட்சம் காணிக்கை வசூல்

ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 19.95 லட்சம் ரூபாய் காணிக்கையாக வசூலானது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனதால், கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் கோயில் உண்டியலில் செல்லாத பணத்தை காணிக்கையாக செலுத்த வாய்ப்பு உள்ளது என இந்து அறநிலைதுறை அதிகாரிகள் கருதினர். இதையடுத்து முக்கிய கோயில்களில் உண்டியல்களில் உள்ள உண்டியல்களை நவ., 24, 30 மற்றும் டிச., 8, 15, 30 ஆகிய தேதிகளில் திறந்து எண்ணுமாறு கோயில் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி 2ம் கட்டமாக நேற்று ராமேஸ்வரம் திருக்கோயிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது. இருந்தாலும் 6 நாட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 19 லட்சத்து 95 ஆயிரத்து 266 ரூபாய் ரொக்கம், 12 கிராம் 500 மி.கி., தங்கம், 645 கிராம் வெள்ளி கிடைத்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !