பாலக்காடு செம்பை சங்கீத உற்சவம் டிச.,10ல் நிறைவு
ADDED :3268 days ago
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், செம்பை சங்கீத உற்சவம் இன்று நிறைவடைகிறது.
கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், செம்பை சங்கீத உற்சவம் நவ., 25ல் துவங்கியது. தேவஸ்தானம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் துவக்கி வைத்தார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் நடந்தன. உற்சவத்தின் சிறப்பு அம்சமான பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கும் நிகழ்ச்சி, டிச.,9 காலை, 9:30 முதல், 10:30 மணி வரை நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று பாடிய கீர்த்தனங்களை, ஆயிரக்கணக்கானோர் ரசித்தனர். டிச.,10 இரவு, 10:00 மணிக்கு மூத்த இசைக் கலைஞர்கள் கே.ஜி.ஜயன் மற்றும் டி.வி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் கச்சேரி நடக்கிறது.