கணபதி ஹோமத்துடன் 47ம் ஆண்டு விளக்கு பூஜை
ஊத்துக்கோட்டை: கணபதி ஹோமத்துடன் துவங்கிய, அய்யப்ப சுவாமிக்கான, 47ம் ஆண்டு விளக்கு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில் உள்ள, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில்,அய்யப்ப சுவாமி எழுந்தருளிஉள்ளார். இவருக்கான, 47ம் ஆண்டு விளக்கு பூஜை விழா, டிச.,9 துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.
தொடர்ந்து, அய்யப்பசுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது; மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக, அய்யப்ப பக்தர்களின் பஜனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. டிச.,10 காலை, 11:00 மணிக்கு, திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை, அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.