முப்பிடாரி அம்மன் கோயிலில் ஐயப்பன் வீதி உலா
ADDED :3245 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் முப்பிடாரி அம்மன் கோயில் அருகே வில்லாளி வீரன் ஐயப்பபக்த பஜனை சேவா சங்கம் சார்பில் ஐயப்பன் வீதி உலா நடந்தது. முன்னதாக இரண்டு நாளாக நடந்த விழாவில் கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து 108 திருவிளக்கு பூஜை, அஷ்டாபிஷேகம், கன்னிபூஜை, நாம சங்கீர்த்தன பஜனை நடந்தன. தொடர்ந்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக செண்டை மேளம் மற்றும் நாதஸ்வரத்துடன் யானை மீது ஐயப்பன் வீதி உலா நடந்தது. நகரின் முக்கிய தெருக்களை சுற்றி வந்து முப்பிடாரி அம்மன் எதிரே உள்ள அன்னதானப் பந்தலில் முடிந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தினர் செய்தனர்.