பொம்மன்பட்டியில் வருடாபிஷேகம்
                              ADDED :3245 days ago 
                            
                          
                          வடமதுரை:வடமதுரை வெள்ள பொம்மன்பட்டியில் தனியார் இடத்தில் பழமை வாய்ந்த சக்திவிநாயகர், சுப்பிரமணியசுவாமி கோயில் இருந்தது. திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டபோது இக்கோயில் அகற்றப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அதே பகுதியில் புதிதாக கோயில்களை கட்டி கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தினர். இதன் தொடர்ச்சி நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. கணபதி, தன்வந்திரி யாக பூஜைகள், அன்னதானம் நடந்தது. சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.