திருவெற்றியூரில் பூட்டப்பட்ட சர்ச் மீண்டும் திறப்பு
ADDED :3320 days ago
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் புனித அன்னை சர்ச் உள்ளது. இதனை நிர்வகிப்பதில் இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் சர்ச் பூட்டப்பட்டது. இதையடுத்து பாதிரியார்கள் முன்னிலையில் அமைதி பேச்சு நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பூட்டப்பட்ட சர்ச் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம், முதன்மை குரு மரியஅருள் மற்றும் 15க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.