உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவரே உங்களுக்காக பேசுவார்!

அவரே உங்களுக்காக பேசுவார்!

ஒரு பேச்சுப் போட்டிக்கோ, நேர்முகத்தேர்வுக்கோ போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இவற்றுக்கு புறப்படும் முன்பாக என்ன பேசுவது, எ ப்படி நடந்து கொள்வது என்பதை புத்தகங்களைப் படித்தோ, அனுபவஸ்தர்களிடம் கேட்டோ தெரிந்து கொண்டிருப்பீர்கள். இப்படி மற்றவர்களிடம்  கலந்தாலோசிப்பதை விட, எல்லாவற்றுக்கும் மேலான தேவனை நீங்கள் ஜெபிக்க வேண்டும். “ஆண்டவரே! நான் இன்று ஒரு முக்கிய விஷயம்  தொடர்பாக போகிறேன். என் வாழ்க்கை தலைவிதியை நிர்ணயிக்கும் நேர்முகத் தேர்வுக்கு செல்லப் போகிறேன். நிர்க்கதியாக கணவன் வீட்டில் இ ருந்து திருப்பி அனுப்பப்பட்ட என் சகோதரியின் வாழ்க்கை பிரச்னை குறித்து பேசி, பிரிந்தவர்களை இணைத்து வைக்கப் போகிறேன். நான் பேச்சுப்  போட்டிக்கு செல்கிறேன். எனக்கு பேசும் வல்லமையையும், வெற்றியையும் தர வேண்டும்,” என ஜெபித்தாலே போதும். வல்லமையுள்ள தேவன்  உங்கள் வாக்கில் இறங்கி விடுவார். பைபிளில், “எப்படி பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேச  வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல; உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து ÷ பசுகிறவர்” (மத்.10: 19,20) என்ற வசனம் இருக்கிறது. இந்த வசனத்தின்படி உங்கள் இடத்தில் இருந்து தேவனே பேசுவார்; அவரே பதிலளிப்பார். ÷ தவனின் பதில் சமாதானத்தையும், வெற்றியையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !