என்ன சாப்பிடலாம்!
ADDED :3619 days ago
எந்த வகையான உணவுகளை சாப்பிடலாம் என நபிகள் நாயகம் கூறுகிறார். கனி வகைகளில் பேரீச்சையும் மாதுளையும் நாயகத்திற்கு மிகவும் பி டித்தமானவை. மாதுளையை அதன் உள்தோலுடன் சாப்பிட்டால் அது குடலை வலுப்படுத்தும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பேரீச்சையுடன் தர் ப்பூசணி பழத்தையும் சாப்பிடுவார். ஒன்றின் உஷ்ணம் மற்றதின் குளிர்ச்சியை சமமாக்கி விடும் என்று இதற்கு காரணம் சொன்னார். மேலும் பேரீச்சம் பழத்துடன் வெள்ளரிக்காயையும் சேர்த்துக் கொண்டார். நாயகத்திற்கு சுரைக்காய் மிகவும் பிடிக்கும். இறைச்சி சமைக்கும்போது அதில் அதிகமாக சுரைக்காயை போடவேண்டும் என, தனது துணைவியார் ஆயிஷா அம்மையாரிடம் சொல்வார். கவலை நிரம்பிய மனதிற்கு அது புத்துணர்வு ஊட்டும் மருந்தாக இருக்கும் என்பார். இலந்தை, திராட்சை, அத்தி ஆகியவையும் நபிகள் நாயகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பழ வகைகள்.