மகா மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் திருவிழா
ADDED :3248 days ago
கொடுமுடி: கொடுமுடி அருகே, ஏமகண்டனூர் மகா மாரியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா நேற்று மாலை வெகு விமர்சையாக நடந்தது. ஆண், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக வேல், கரகம், மகா மாரியம்மன் உருவச்சிலை உள்ளிட்டவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இரவில் மகா மாரியம்மன் சுவாமி ஊர்வலத்துடன் விழா நிறைவடைந்தது.