உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் மறைந்த முதல்வருக்கு மோட்ச தீபம் ஏற்றம்

சேலத்தில் மறைந்த முதல்வருக்கு மோட்ச தீபம் ஏற்றம்

சேலம்: சேலத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாணவரணி சார்பில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று சேலம் அம்மாபேட்டை, காந்தி மைதானத்தில் மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை மோட்ச திருவாசகம் ஓதுதல் மற்றும் மோட்ச தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. சேலம், மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., சக்திவேல் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள், முன்னாள் மேயர், துணை மேயர், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !