கிறிஸ்துமஸ் சிந்தனை - 1: பலம் வாய்ந்த ஜெபம்
“நான் கூப்பிட்ட நாளிலே (ஜெபம் செய்த நாளில்) எனக்கு மறுஉத்தரவு அருளினீர் (உடனே பலன் தந்தீர்). என் ஆத்துமாவிலே பெலன் (வலிமை) தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்!” என்று பைபிளில் ஒரு வசனம் வருகிறது. ஜெபம் பலம் வாய்ந்தது. வல்லமை நிறைந்தது. நாமாக சில செயல்களைத் திட்டமிடும் போது, பிசாசானவன் நம்மைப் பார்த்து புன்முறுவல் செய்வான். நாம் ஜெப சிந்தனையற்றவர்களாக பரபரப்பாக பணியில் ஈடுபடும்போது, புன்முறுவல் செய்வான். ஆனால், நாம் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கும் போது, அவன் நம்மைப் பார்த்து நடுங்க ஆரம்பிப்பான். அதை விட நாம் சிலராகக் கூடி ஜெபிக்கும் போது அவன் நடுநடுங்கிப் போகிறான். ஏனெனில், தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார். பதிலளிக்கும் போது, நமக்கு நம்மால் ஆவதை விட, மேன்மையானது எது என்பதையறிந்து நம் ஒவ்வொருவருக்கும் மேன்மையானதைத் தருவார். ஜெபத்தின் வலிமையை இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உணர்வோம்.