ஸ்ரீ ஆப்தன் சபாவின் மார்கழி திருவிழா
ADDED :3253 days ago
மதுரை: மதுரையில் ஸ்ரீ ஆப்தன் சபாவின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு, மார்கழி திருவிழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் டிச.,26 மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.யானையின் அம்பாரியும், பேட்டை துள்ளலும் எனும் தலைப்பில் பி.வி.கே.ஹரிஹரன் சுவாமி பேசுகிறார். மாலை 5:00 மணிக்கு சுவாமி ஐயப்பன் விக்ரஹ சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலை 6:00 மணிக்கு ஆரத்தி பூஜை, மாலை 6:15 மணிக்கு கலியுக வரதன் எனும் தலைப்பில் பொன்.சந்திரசேகரனின் பக்தி சொற்பொழிவு, இரவு 7:00 மணிக்கு நாகராஜ் குழுவினரின் ஐயப்பன் பக்தி பாடல் இன்னிசை, இரவு 8:15 மணிக்கு ஐயப்பன் பஜனை, படிபூஜை நடக்கிறது.பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட ஐயப்பன் படம், ஐயப்பன் சரடு, ஐயப்பன் புத்தகம், 2017 காலண்டர், மினி டைரி, பிரசாதம் வழங்கப்படும். முன்பதிவிற்கு 99658 57321.