ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி
ADDED :3255 days ago
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் சக்தி மாலை அணிந்து, இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதில், புது ஏரி, வேப்பங்குறிச்சி, தெற்குவெள்ளுர், வெளிக்கூனங்குறிச்சி, அண்ணாஸ்டாப், தாண்டவன்குப்பம் பகுதிகளை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் வரும் 30ம் தேதி மேல்மருவத்துார் செல்கின்றனர்.