மக்கள் பெரும்பாலும் துன்பத்தில் சிக்கித் தவிப்பது ஏன்?
ADDED :3607 days ago
இயற்கையாக எது நடக்க வேண்டுமோ அது கடவுளின் கட்டளைப்படி நடக்கிறது. மக்கள் அவரவர் கடமையை உணர்ந்தால் எதுவும் துன்பமாக தோன்றாது. இப்பிறவியில் நமக்குரிய வாழ்க்கை முறையை கடவுள் வகுத்துத் தந்திருக்கிறார். அதைப் புரிந்து கொள்ளாமல் இயற்கை நியதிகளை மீறும் போது பாதிப்பு உண்டாகிறது. அவரவர் செய்ய வேண்டிய கடமையைச் சரியாகச் செய்யாமல், செய்யக் கூடாததை விருப்பப்பட்டு செய்வதால் புண்ணிய பூமியான இங்கு துன்பம் விளையும் சூழல் உருவாகி இருக்கிறது.