வாசற்படியில் நின்று பணம், பொருள் கொடுப்பதோ, சாப்பிடவோ கூடாது என்பது ஏன்?
ADDED :3607 days ago
வாசற்படி என்பதை விட நிலைப்படி என்பது தான் சரி. வாசல் நிலை மரத்தால் செய்யப்பட்டு அதன் கீழ் நவரத்தினம், தங்கம், வெள்ளி போன்றவை வைத்து, மகாலட்சுமி அதன் வழியாக வீட்டில் நிலைத்திருக்க வேண்டும் என பொருத்துவார்கள். தினமும் அந்த இடத்தில் மெழுகி கோலமிடவேண்டும். அங்கு உட்காரவும் கூடாது. அங்கு நின்று பணம் கொடுப்பதும், சாப்பிட்டு எச்சில் செய்வதும் கூடாது. இவற்றைச் செய்தால் வறுமை ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.