உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுதையாகி விடாதே!

கழுதையாகி விடாதே!

கழுதை பொதியைச் சுமக்கலாம், ஆனால், கழுதையை பொதி சுமக்க முடியுமா?... இது கடிஜோக் அல்ல. சீரியசான விஷயம். ஒரு துறவியிடம் சீடர்கள், “ஐயா! இந்த உடலைப் பாதுகாக்க குளிக்கிறோம், சாப்பிடுகிறோம், உறங்குகிறோம், வாசனைத் திரவியங்களைப் பூசுகிறோம். இதெல்லாம் எதற்காக? என்றனர். துறவி அவர்களிடம், “இந்த உடல் கழுதை போன்றது. அது நமக்குள் கிடக்கும் உயிர் என்னும் பொதியைச் சுமந்து செல்கிறது. அதனால் உடலைப் பராமரிக்கிறோம். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிகமாக சாப்பிடும் போதோ, கண்டதை உண்ணும் போதோ, குடிக்கும் போதோ, புகை பிடிக்கும்போதோ நாம் கழுதையைச் சுமந்து செல்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள், என்றார். “நீ உணவு ஆசைக்கு ஆளானவனாயிருந்தால் உன் தொண்டையில் ஒரு கத்தியை வைத்துக் கொள் (நீதி:23:2) என்று பைபிள் கூறுகிறது. ஆம்.. தேவையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் மனிதனை அழித்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !