வெண்மணி சம்பவம்: கொடியேற்று நிகழ்ச்சி
ADDED :3255 days ago
எலச்சிபாளையம்: குமரமங்கலத்தில், மா.கம்யூ., கட்சியின் சார்பில், வெண்மணி சம்பவ தினம் கடைபிடிக்கப்பட்டது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலம் பிரிவு சாலையில், வெண்மணி சம்பவ தின நிகழ்ச்சி நடந்தது. மா.கம்யூ., குமரமங்கலம் கிளை செயலாளர் அய்யாதுரை, குமரமங்கலம் பஸ் ஸ்டாப்பில் நடந்த நிகழ்சியில் கிளை செயலாளர் சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 1968ல் தஞ்சை மாவட்டம், கீழ்வெண்மணியில், விவசாய கூலித்தொழிலாளர்கள், 44 பேர் கூலி உயர்வு கேட்டு போராடிய போது, ஒரே வீட்டில் அடைத்து தீயிட்டு கொளுத்தினர். அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.