உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குப்பையண்ணசாமி கோவிலில் பொங்கல்: பக்தர்கள் குவிந்தனர்

குப்பையண்ணசாமி கோவிலில் பொங்கல்: பக்தர்கள் குவிந்தனர்

மொடக்குறிச்சி: குப்பையண்ன சுவாமி கோவில், பொங்கல் விழாவில் பக்தர்கள் குவிந்தனர். எழுமாத்தூர் அருகே, 60 வேலம்பாளையத்துக்கு உட்பட்ட துக்காச்சியில், குப்பையண்ணசாமி மற்றும் செல்வக்குமார சுவாமி கோவிலில், பொங்கல் விழா நேற்று நடந்தது. பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட பூச்சிகளின் விஷத்தை முறிக்க, இக்கோவில் வளாகத்தில், ஒரு கிணறு உள்ளது. கிணற்று தீர்த்தத்தை குடித்தால் விஷம் முறியும். உடல் நலம் பாதிக்காது என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நேற்று நடந்த விழாவில், ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். சுவாமிக்கு இன்று மறுபூஜை நடக்கிறது. இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !