மதுரையில் ஐயப்பன் திருவிழா
ADDED :3255 days ago
மதுரை:ஆப்தன் (நண்பன்) சபா சார்பில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற மூன்றாம் ஆண்டு மார்கழி திருவிழா மதுரையில் நடந்தது.ஐயப்பன் விக்கிரகம் யானை மீது வைத்து கொண்டுவரப்பட்டது. பெண் பக்தர்கள், 16 வகை அபிஷேகங்கள் நடத்தி வழிபட்டனர். யோகா குரு மூர்த்தி ஒருங்கிணைத்தார். குருசாமி ஹரிஹரன் தலைமையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. கலியுக வரதன் தலைப்பில் பொன் சந்திரசேகரனின் சொற்பொழிவு, நாகராஜ் குழுவின் பாடல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட ஐயப்பன் படம் வழங்கப்பட்டது. சபா செயலர் மங்கையர்கரசி ஏற்பாடுகளை செய்தார்.