அய்யப்பன் கோவில்களில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED :3255 days ago
சேலம்: சேலத்தில் உள்ள அய்யப்பன் கோவில்களில், மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று நடந்தது. சேலம், டவுன் தர்மசாஸ்தா ஆசிரமத்தில், நவ., 11ல் மண்டல பூஜை துவங்கியது. அங்கு, தினமும் காலை, மாலையில், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்துவந்தது. நேற்று, மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. அதையொட்டி, காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:30க்கு மஹா கணபதி ஹோமம், 6:00 மணிக்கு நெய் அபிஷேகம், தீபாராதனை, 10:00 மணிக்கு மண்டல பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு நடைசாத்தல், 12:30க்கு அன்னதானம், 5:00 மணிக்கு நடை திறப்பு நடந்தது. தொடர்ந்து, பக்தி இன்னிசை கச்சேரி, புஷ்பாஞ்சலி உள்ளிட்டவை நடந்தது. அதேபோல், ஸ்ரீசாஸ்தா நகரில் உள்ள அய்யப்பா ஆசிரமத்திலும், மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று நடந்தது.