உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் ரூ.7.43 லட்சம் காணிக்கை

கொளஞ்சியப்பர் கோவிலில் ரூ.7.43 லட்சம் காணிக்கை

விருத்தாசலம்: விருத்தாசலம், மணவாள நல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் காணிக்கையாக 7.43 லட்சம் ரூபாய் இருந்தது. விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்களை  திறந்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இப்பணியில் செயலர் அலுவலர் கருணாகரன், ஆய்வாளர் சுபத்ரா, மேலாளர் குருநாதன் மற்றும் கே.வி.பி., வங்கி ஊழியர்கள் உட்பட 50 பேர் ஈடுபட்டனர்.  அதில், 7 லட்சத்து 43 ஆயிரத்து 79 ரூபாய், 38.500 கிராம் தங்கம், 241 கிராம் வெள்ளி இருந்தன. கடந்த நவம்பர் 3ம் தேதி உண்டியல் எண்ணியபோது 7 லட்சத்து 60 ஆயிரத்து 209 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !