ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!
ADDED :3252 days ago
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம், பகல் பத்து உற்சவத்தின் இரண்டாவது நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, பாண்டியன் கொண்டை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, அடுக்கு திருஆபரணம், ரத்தின அபயஹஸ்தம் அலங்காரத்தில், ஆழ்வார்கள் புடைசூழ அர்ச்சுனா மண்டபத்துக்கு எழுந்தளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உற்சவத்தின், 10ம் நாளான, ஜன., 7ல், நம்பெருமாள், மோகினி அவதாரத்தில் எழுந்தருள்வார். ஜன., 8 ஏகாதசி உற்சவத்தின் போது, அதிகாலை, 5:00 மணிக்கு, நம்பெருமாள் ரத்தின அங்கியுடன், சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.