உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம்

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம்

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதியான உற்சவத்தில் நேற்று பகல் பத்து உற்சவம் துவங்கியது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பை முன்னிட்டு 21 நாட்கள் அதியான உற்சவம் நடைபெறும். உற்சவத்தின் துவக்கமாக நேற்று பகல் பத்து உற்சவம் துவங்கியது. அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சிக்கு பின்னர் சவுமியநாராயணப் பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடாகி ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் வழிபாடு நடந்தது. 10ம் நாளில் மோகினி அவதாரத்தில் பெருமாள் தென்னமர வீதி புறப்பாடுடன் பகல் பத்து உற்சவம் நிறைவடையும். ஜன.,8ல் வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு இரவில் பரம பதவாசல் திறப்பும், அடுத்த நாள் முதல் இரவுப் பத்து உற்சவம் இரவுப் பத்தில் தினசரி மாலை 6 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பிரவேசிப்பார். தொடர்ந்து தென்ன மரவீதி புறப்பாடாகி தாயார் சன்னதியில் எழுந்தருளல் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !