புத்தாண்டு கோலாகலம்: கரூர் கோவில்களில் வழிபாடு
ADDED :3262 days ago
கரூர்: ஆங்கில புத்தாண்டையொட்டி கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள், சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரா கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண கோவில், கரூர் மாரியம்மன் கோவில் மற்றும் அய்யப்பன் கோவில்களில், ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசா ஆலயத்தில், நேற்று அதிகாலை, 12:00 மணியளவில், பங்கு தந்தை ராயப்பன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதேபோல், சி.எஸ்.ஐ., நகர தேவாலாயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகுசிறப்பாக நடந்தன.