உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களநாதசாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஜன.,11ல் உள்ளூர் விடுமுறை

மங்களநாதசாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஜன.,11ல் உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாதசாமி கோயிலில் ஜன.,11ல் ஆருத்ரா தரிசனம் நடப்பதால், அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதசாமி கோயிலில் ஜன.,11ல் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இவ்விழாவை காண மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். எனவே, ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஜன.,11ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில் ஜன.,28ல் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிசட்டம் 1981ன் படி விடுமுறை அறிவிக்கப்படாததால், கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அவசர பணிகளை செய்யும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !