கிணத்துக்கடவு பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :3198 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதி கோவில்களில், மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், மார்கழியையொட்டி, அதிகாலை, 4.00 மணிக்கு சிறப்பு அபிசேகமும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து திருவெண்பாவை படிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், வேலாயுதசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அய்யாசாமி, பிளேக் மாரியம்மன் போன்ற கோவில்களிலும் சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.