உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்ந்த கோலம்!

அமர்ந்த கோலம்!

ராமர் லட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோர் பெரும்பாலான கோயில்களில் நின்ற கோலத்தில் தரிசனம் தருவதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் படவேட்டிலுள்ள கோயிலில் ராமபிரான் வீராசனமிட்டும், அருகில் சீதாபிராட்டி பத்மாசனத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். வலப்பக்கம் அன்னையின் எதிரே அனுமன் அடக்க ஒடுக்கமாக அமர்ந்த நிலையில் ஓலைச்சுவடியைப் படிப்பது போல் காட்சி தருகிறார். இளைய பெருமாளான லட்சுமணர் மட்டும் மரியாதை நிமித்தம் வில் ஏந்தியவண்ணம் நிற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !