உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கலை முன்னிட்டு பானை தயாரிப்பு பணிகள் மும்முரம்

பொங்கலை முன்னிட்டு பானை தயாரிப்பு பணிகள் மும்முரம்

கி.புரம்: லாலாப்பேட்டை, கொடிக்கால் தெருவில் உள்ள, மண்பாண்ட தொழிலாளர்கள், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, பானை தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, கள்ளப்பள்ளி பஞ்., கொடிக்கால் தெருவில், மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மண் பானைகள் செய்து வருகின்றனர். பல்வேறு அளவுகளில் பானைகள் செய்யப்படுகின்றன. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள், லாலாப்பேட்டைக்கு வந்து பானைகளை வாங்கி செல்கின்றனர். இது குறித்து, தொழிலாளி மாணிக்கம் கூறியதாவது: களிமண் மூலம், பானைகள் தயார் செய்யப்படுகின்றன. பானைகள் தயார் செய்யப்பட்ட பின், அவற்றை வெயிலில் நன்றாக காயவைத்து, பிறகு பானைகளுக்கு செம்மண் கலர் கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது. உள்ளூர் சந்தைகள் மற்றும் கரூர், திருச்சி போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு பெரிய பானை, 100 ரூபாய், சிறிய பானை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவை அதிகரிக்கும் பட்சத்தில், விலை சற்று கூடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !