ஹஜ் பயணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED :3210 days ago
காரைக்கால் : காரைக்காலில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் பார்த்திபன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: காரைக்காலில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தகுதியுள்ள இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி வரும் 24ம் தேதி. மேலும் விபரங்கள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் புனித பயணம் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.