அமர்ந்திருக்கும் ஆண்டாள்
ADDED :3590 days ago
பொதுவாக பெருமாள் திருக்கோயில்களில் ஆண்டாள் நின்ற கோலத்திலேயே காட்சி தருவாள். ஆண்டாளை நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் ஒன்றுசேர திருச்சி அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் காணலாம். கோயில் முன் மண்டபத்தில் தனிச் சன்னதியில் நின்ற கோலத்திலும், கருவறையில் இருக்கும் உற்சவராக அமர்ந்தகோலத்திலும் இருக்கிறாள்.