தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்
ADDED :3235 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ நடந்து கிரிவலம் சென்று, அருணா சலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். நேற்றிரவு, 7:58 முதல் இன்று மாலை. 6:11 மணி வரை பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என்பதால், நேற்று மாலை முதலே, பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.