திருப்பூர் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா
திருப்பூர்: மங்கலம், அக்ரகாரபுத்துõர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது; சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மங்கலம் அருகே, அக்ராகாரபுத்துõரில், நுõற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த, 3ல், கிராமசாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன; விசேஷ அலங்காரங்களில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம், நொய்யல் கரையில், சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது; தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், படைக்கலம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல் ஆகியவை நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடந்தன. சிவப்பு பட்டு உடுத்தி, மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சக்தி கரகம் கங்கை அடைதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.