உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி கோவிலில் ஆடல் வல்லானுக்கு ஆனந்த அபிஷேகம்

அவிநாசி கோவிலில் ஆடல் வல்லானுக்கு ஆனந்த அபிஷேகம்

திருப்பூர்: அவிநாசி கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, 32 திரவியங்களில், ஆடல் வல்லானான ஈசனுக்கு அபி ஷேகம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசன விழா, திருவெம்பாவை உற்சவத்துடன், கடந்த, 2ல் துவங்கியது. திருவாதிரை திருநாளான நேற்று முன்தினம் இரவு, சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன விழா, சிவாலயங்களில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற,  அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சிவகாமியம்மன் உடனமர் நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பழம், பன்னீர், தேன், நெய், இளநீர், திராட்சை உள்ளிட்ட பழங்கள், வாசனை, மூலிகை என, 32 திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களின், ஓம் நமசிவாயா கோஷங்களுக்கு மத்தியில், மூன்று மணி நேரம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. நடராஜரும், சிவகாமிஅம்மனும், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பட்டி சுற்றி வந்து, தேரோடும் ரத வீதிகளில் திருவீதி உலா வந்தனர்.

திருப்பூர் எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு, 32 திரவியங்களில், இரண்டு மணி நேரம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆருத்ரா தரிசனம் தந்த இறைவனை, பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். நல்லுõர், விசாலாட்சியம்மன், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை, அண்டம் இயங்க அச்சாரமாக விளங்கும் தில்லை நடராஜருக்கு, திரவியங்கள், பழங்கள் கொண்டு, அபிஷேகம்  நடந்தது. அம்மனுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை ஆருத்ரா தரிசன விழா, சிறப்பு அபிஷேகம் நடந் தது. விசேஷ அலங்காரத்தில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளினார். திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பெருமாநல்லுõர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில் உள் ளிட்ட சிவாலயங்களில், ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !