தேசிய இளைஞர் தினம்: மாணவர்கள் ஊர்வலம்
ADDED :3192 days ago
பழநி: பழநி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடந்தது. பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லுாரி முதல்வர் அன்பு செல்வி, பழநி கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து, விவேகானந்தர் ரதம் மற்றும் மாணவர்களின் ஊர்வலம் துவக்கி வைத்தனர். திண்டுக்கல் ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு, காந்திரோடு வழியாக முக்கிய வீதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். விவேகானந்தர் சிந்தனைகள் அடங்கிய புத்தகங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விவேகானந்தா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.